அச்சு அசலாக கோஹ்லியை போலவே அடித்து நொறுக்கிய ஜெமீமா.. வைரல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்திய வீராங்கனை ஜெமிமா, விராத் கோஹ்லி போலவே ஷாட் அடித்து இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நேற்று முன் தினம் நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. கேப்டன் பிஸ்மா 68 ரன்கள் அடித்திருந்தார்.
இந்த நிலையில் 150 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடிய நிலையில் ஒரு கட்டத்தில் இந்தியா 93 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்த நிலையில் நட்சத்திர வீராங்கனை ஜெமிமா தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். அவர் 38 பந்துகளில் 53 ரன்கள் அடித்தார் என்பதும் இதில் 8 பவுண்டரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர அடித்த பல ஷாட்கள் விராட் கோஹ்லி போல் அச்சு அசலாக இருந்ததாக நெட்டிசன்கள் இருவரது ஷாட்களையும் ஒப்பிட்டு வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
இந்த போட்டியில் இந்திய அணி 19 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்து பாகிஸ்தானை வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
Jemimah🤝Virat#INDvsPAKpic.twitter.com/vglaNv2ybg
— Nikhil Sharma (@nikss26) February 13, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments