"ஒரு வருஷம், ஒரே ஆடை....என்ன காரணம்...? இணையத்தில் கலக்கும் வீடியோ...!
Send us your feedback to audioarticles@vaarta.com
264 நாட்களும் ஒரே உடை அணிந்து, மீட்டிங் சென்ற பெண்ணின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போது ஊரடங்கு என்பதால், பல நிறுவனங்களும் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணிபுரியும்படி கூறியுள்ளார்கள். அந்தவகையில் மீட்டிங் போன்றவற்றை இணையம் மூலமாக, வீட்டிலிருந்தே பணியாளர்கள் பங்கேற்று கொள்கிறார்கள். சிலருக்கு தினசரியும், சிலருக்கு வாரத்திற்கு ஒருமுறையும் மீட்டிங் நடக்கிறது.
அந்தவகையில் ஜெம் என்ற பெண் சென்ற 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வீட்டிலிருந்தே, work from home-இல் பணிபுரிந்து வருகிறார். ஏப்ரல் 2-ஆம் தேதி இவர் மீட்டிங்-கை பூப்போட்ட நீலச்சட்டையை அணிந்துகொண்டு அட்டென்ட் செய்துள்ளார். இதன்பின்பு இவர் அட்டென்ட் செய்த அனைத்து மீட்டிங்-களுக்கும், அதாவது கடந்த 15 மாதங்களாக இதே உடை அணிந்து வந்துள்ளார். ஆனால் இதை யாரும் கண்டுபிடிக்கவில்லை.
இந்நிலையில் இவர் வேறு ஒரு நிறுவனத்திற்கு பணிக்காக மாறிச் சென்றபோது, கடைசியாக இவர் மீட்டிங்கில் பேச அனுமதி தரப்பட்டது. அப்போது பேசிய அவர் இதுவரை தான் அட்டென்ட் செய்த 264 மீட்டிங்கிற்கும் இதே உடை தான் அணிந்துவந்தேன், யாருக்கும் தெரியவில்லை என்று கூறியுள்ளார். இதை கேட்ட சக ஊழியர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
இதன்பின் ஜெம் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் மற்றும் யுடியூபில் வெளியிட, இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பல இணையவாசிகள் ரசித்தும், தங்கள் அனுபவங்களை கமெண்ட் செய்தும் வருகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout