மீண்டும் முதல் இடத்தை பிடித்த ஜெஃப் பெசாஸ்!
- IndiaGlitz, [Wednesday,February 17 2021]
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் உலகப் பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்து உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக உலகின் நெம்பர் ஒன் பணக்காரராக இருந்த பெசாஸை கடந்த சில மாதங்களுக்கு முன்பு எலான் மஸ்க் முந்தினார். டெஸ்லா கார் நிறுவனத்தின் பங்கு சந்தை உயர்ந்ததால் எலான் மஸ்க் உலகின் முதல் பணக்காரர் என்ற நிலைக்கு உயர்ந்தார். அப்போது உலகின் இரண்டாம் பணக்காரர் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட ஜெஃப் பெசாஸ் தற்போது மீண்டும் முதல் இடத்தை தக்கவைத்து உள்ளார்.
கடந்த 1995 ஆம் ஆண்டு புக் ஸ்டோரோக தொடங்கப்பட்ட அமேசான் நிறுவனம் தற்போது 1.7 ட்ரில்லியன் மதிப்புடைய இ-காமர்ஸ் நிறுவனமாக உயர்ந்து இருக்கிறது. மேலும் உலகின் முதன் ஆன்லைன் வர்த்தக நிறுவனமாகவும் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தை உருவாக்கிய ஜெஃப் பெசாஸ் சமீபத்தில் தன்னடைய சி.இ.ஓ பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்து இருந்தார்.
மேலும் ப்ளூம்பர்க் பில்லியனர் இண்டெக்ஸ் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் ஜெஃப் பெசாஸ் சொத்து மதிப்பு 191.2 பில்லியன் டாலர்கள் என்றும் தற்போது டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 2.4% குறைந்ததை அடுத்து 995 மில்லியன் டாலர் கூடுதல் மதிப்புடன் தற்போது ஜெஃப் பெசாஸ் உலகின் பெரிய பணக்காரர் நிலைக்கு உயர்த்தப்பட்டு உள்ளார் என்றும் கூறப்பட்டு உள்ளது. எலான் மஸ்க் உலகின் பெரிய பணக்காரராக இருந்தபோது அவர் பதிவிட்ட ஒவ்வொரு டிவிட்டர் பதிவும் உலக வர்த்தகத்தில் பெரிய மாற்றத்தை விளைவித்தது. இந்நிலையில் மீண்டும் உலகின் பெரிய பணக்காரராக ஜெஃப் பெசாஸ் உயர்ந்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.