நடிகர் கமலின் தோல்விக்கு என்ன காரணம்? விமர்சிக்கும் வீடியோ!
- IndiaGlitz, [Saturday,May 08 2021]
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார். இந்தத் தோல்விக்கு என்ன காரணம்? என்பது போன்ற சந்தேகத்தை அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து அரசியல் விமர்சகர்களும் பேசத் தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் மக்கள் நீதிமய்யம் கட்சி தனது கூட்டணி கட்சியான சமத்துவ மக்கள் கட்சிக்கு அதிகபடியான இடத்தை ஒதுக்கி தனது மேன்மையைக் கெடுத்துக் கொண்டு விட்டது எனவும் விமர்சிக்கிப்படுகிறது. அதோடு அக்கட்சியில் இவரை தவிர பெரிய தலைவர்கள் யாருமை இல்லாத சூழலில் தமிழகம் முழுவதும் சென்று தனது கட்சிக்காரர்கள் சார்பில் வாக்குச் சேகரித்தாரா? என்றும் சில அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் சாவலாக நின்ற நடிகர் கமல்ஹாசன் முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் முன்னணி இடத்தைப் பெற்று இருந்தார். கடைசியில் பாஜக வேட்பாளர் சற்று கூடுதலான வாக்குகளை பெற்று வெற்றிப்பெற்றுள்ளார். இந்த அடிப்படையில் நடிகர் கமலின் தோல்வியை எப்படி எடுத்துக் கொள்வது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடுத்த நகர்வு எப்படி இருக்கும்? என்றும் சிலர் சந்தேகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதோடு நடிகர் கமல் இனி தேர்தலுக்கு வருவாரா என்று கூட சிலர் சந்தேகத்தை கிளப்புகின்றனர். காரணம் தமிழகத்தில் மிகவும் குறைவாக வாக்குகளை பெற்ற ஒரு கட்சியாக மக்கள் நீதி மய்யம் மாறி இருக்கிறது. நடந்து முடிந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல வாக்குகளைப் பெற்ற நடிகர் இந்த தேர்தலில் 180 இடங்களில் 178 டெபாசிட்டை இழந்து உள்ளார்.
மேலும் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே 2 ஆம் இடத்தையும் 25 இடங்களில் 3 ஆவது இடத்தையும் 74 இடங்களில் 5 ஆவது இடத்தையும் 14 இடங்களில் 6 ஆவது இடத்தையும் படிப்படியாக வாக்குகளின் அடிப்படையில் பின்னுக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார். இதனால் நடிகர் கமலின் அரசியல் நிலை குறித்து தொடர்ந்து விவாதம் எழுப்பப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் அரசியல் விமர்சகர் ஜீவா சகாப்தம் அவர்கள் நடிகர் கமலின் நிலைப்பாடு குறித்து சிறப்பு நேர்காணல் வழங்கி உள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகக் கவனம் பெற்று இருக்கிறது.