உங்கள் தம்பிகளுக்கு அரசியல் நாகரீகத்தை கற்று கொள்ளுங்கள். சீமானுக்கு நடிகர் ஜீவா வேண்டுகோள்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த வந்த நாம் தமிழர் கட்சியின் சீமான், 'ரஜினிகாந்த் தான் நடித்த 'கபாலி' படத்திற்கு வாங்கிய சம்பளம் குறித்து கணக்கை காட்டுவாரா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு ஒரு ரஜினி ரசிகனாக பதிலளித்த நடிகர் ஜீவா, 'நாம் தமிழர் கட்சிக்கு வரும் பணத்துக்கு சீமான் கணக்கு காட்டுவாரா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதனால் ஜீவாவுக்கு நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து தொலைபேசியில் மிரட்டி வருவதாக ஜீவா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் சீமானுக்கு ஜீவா ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியது இதுதான்:
மரியாதைக்குரிய அண்ணன் சீமான் அவர்களுக்கு... சில தினங்களுக்கு முன்பு கபாலி படத்தின் சம்பளத்தை கணக்கு காட்ட ரஜினிகாந்த் அவர்களால் முடியுமா என்று நீங்கள் கேட்டதற்கு, உங்கள் கட்சிக்கு வரும் பணத்திற்கு உங்களால் கணக்கு காட்டமுடியுமா என்று ஒரு ரசிகனாக தலைவர் திரு.ரஜினிகாந்த அவர்களின் ஆதரவாளராக நான் எனது கருத்தைப் பதிவிட்டிருந்தேன்.
அது முதல் உங்கள் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் சிலர் தொலைபேசியில் என்னை தொடர்புகொண்டு பேசிவருகிறார்கள் அதில் சிலர் தவறாகவும் மரியாதைக்குறைவான வார்த்தைகளில் பேசுவது வருத்தமளிக்கிறது. இது தமிழர் பண்பாடும் அல்ல... ஆகையால் உங்களின் சில தம்பிகளுக்கு நீங்கள் விமர்சனங்களை பொது மேடையில் விவாதிப்பது மட்டுமே அரசியல் நாகரீகம் என்பதை சொல்லுங்கள் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments