ஜீவா நடித்த திகில் பேய்ப்படம்.. 'பிளாக்' டிரைலர் ரிலீஸ்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் ஜீவா மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான திகில் பேய் படம் ‘பிளாக்’ விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள "பிளாக்" என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தொழில்நுட்ப பணிகளும் முடிவடைந்துவிட்டது. இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை என டிரைலரில் இருந்து தெரிகிறது. ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் இருவரும் ஒரு வில்லாவில் தங்கியிருக்கும் நிலையில், அந்த வில்லாவில் நடக்கும் சில மர்மமான விஷயங்கள் இருவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன. இதைத் தொடர்ந்து, என்ன நடந்தது என்பதே திகில் காட்சிகளுடன் கொண்ட "பிளாக்" படத்தின் கதையாகும்.
பாலசுப்பிரமணி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த படம் நடிகர் ஜீவாவுக்கு ஒரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments