ஜீவா நடித்த திகில் பேய்ப்படம்.. 'பிளாக்' டிரைலர் ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Thursday,September 26 2024]

நடிகர் ஜீவா மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான திகில் பேய் படம் ‘பிளாக்’ விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள பிளாக் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தொழில்நுட்ப பணிகளும் முடிவடைந்துவிட்டது. இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை என டிரைலரில் இருந்து தெரிகிறது. ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் இருவரும் ஒரு வில்லாவில் தங்கியிருக்கும் நிலையில், அந்த வில்லாவில் நடக்கும் சில மர்மமான விஷயங்கள் இருவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன. இதைத் தொடர்ந்து, என்ன நடந்தது என்பதே திகில் காட்சிகளுடன் கொண்ட பிளாக் படத்தின் கதையாகும்.

பாலசுப்பிரமணி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த படம் நடிகர் ஜீவாவுக்கு ஒரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

ஒரே விழாவில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா - சமந்தா.. வைரல் புகைப்படங்கள்..!

லண்டனில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பிரியங்கா சோப்ரா மற்றும் சமந்தா கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

ரஜினி, அஜித், தனுஷ் எனக்கு கிடைத்த பம்பர் பரிசு.. பிரபல நடிகை பெருமிதம்..!

ரஜினிகாந்த், அஜித், தனுஷ் ஆகியவர்களுடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகப் பெரிய பம்பர் பரிசு

உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் அஜித் பட தயாரிப்பாளர்.. ஏற்பாடுகளை செய்யும் தமிழ் நடிகர்..!

அஜித்தின் ’மங்காத்தா’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்த துரை தயாநிதி உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல

இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே... பிக்பாஸ் போட்டியாளராக ‘குக் வித் கோமாளி’ பிரபலமா?

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 6ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

'காதம்மா' கேரக்டராகவே மாறிய நயன்தாரா.. விக்னேஷ் சிவன் கனவு நனவானதா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவான ’நானும் ரௌடிதான்’