நாங்க யார்கிட்டயும் தோக்க மாட்டோம்: 'களத்தில் சந்திப்போம்' டிரைலர்

  • IndiaGlitz, [Monday,October 26 2020]

ஜீவா மற்றும் அருள்நிதி முதல் முறையாக இணைந்து நடிக்கும் ’களத்தில் சந்திப்போம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே. சூப்பர் ஹிட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 90ஆவது திரைப்படமான இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிய உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகி உள்ளது.

கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட அதிரடி ஆக்ஷன் படமாக இந்த படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்னர் ஜீவாவுக்கு திரையுலக வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும் ஒரு திரைப்படமாக இந்த திரைப்படத்தை கருதலாம். அதேபோல் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் அருள்நிதியின் அதிரடி ஆக்சன் நடிப்பும் வழக்கம்போல் சூப்பராக உள்ளது.

மஞ்சிமா மோகன் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய இரண்டு நாயகிகள் படத்தின் ரொமான்ஸ் காட்சிகளுக்கு உதவியுள்ளனர் என்பது டீசரில் இருந்து தெரிய வருகிறது. ’நான் இவன்கிட்ட தோப்பேன், இவன் என்கிட்ட தோப்பான் ஆனால் நாங்க யாருகிட்டயும் தோக்க மாட்டோம்’ என்ற அசத்தலான வசனத்துடன் நிறைவடையும் இந்த படத்தை ஏன் ராஜசேகர் இயக்கியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையில் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில் தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

இந்தியாவில் முதல் முறையாக நேரலையில் ஒளிபரப்பப்பட்ட வழக்கு விசாரணை!!!

இந்தியாவில் முதல் முறையாக காணொலி மூலம் நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணை நேரலையில் ஒளிபரபப்பப் பட்டது.

திடீரென அரசியலில் குதித்த பிரபல நடிகை: தேடி வந்தது துணைத்தலைவர் பதவி!

பிரபல நடிகை ஒருவர் அரசியலில் இணைந்தவுடன் அவருக்கு கட்சியின் மகளிர் அணி துணைத் தலைவர் பதவி தேடி வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சாக்சி தோனியின் அன்பு முத்தத்தை பெற்ற சிஎஸ்கேவின் இளம் வீரர்!

நேற்று பெங்களூரு அணிக்கு எதிராக விளையாடிய சிஎஸ்கே அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது என்பதும் இந்த போட்டியில் விளையாடிய இளம் வீரர் ருத்ராஜ்

உலகத்திலேயே முதல் முறையாக சரக்கு பாட்டிலுக்கும் ஆயுதப் பூஜை…

மனித நாகரிகத்திற்கு அடிப்படையாக அமைந்த ஒன்று சக்கரத்தின் கண்டுபிடிப்பு.

நீர் சறுக்கல்… கடல் அலைகளை எதிர்த்து சாதனைப் படைத்து வரும் சென்னை வீராங்கனை!!!

இனப்பாகுபாடு என்பது உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு நிகழும் சாதாரண நிகழ்வாகவே இருந்து வருகிறது.