300க்கு 300 மதிப்பெண் எடுத்தும் மீண்டும் தேர்வு எழுத முடிவு செய்த மாணவர்: ஆச்சரிய தகவல்
- IndiaGlitz, [Sunday,July 17 2022]
சமீபத்தில் ஜே.ஈ.ஈ. மெயின் தேர்வு ரிசல்ட் வந்த நிலையில் இந்த தேர்வில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நவ்யா ஹிசாரியா என்பவர் 300க்கு 300 மதிப்பெண் எடுத்து 100 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளார். இருப்பினும் அவர் மீண்டும் இந்த தேர்வை எழுத முடிவு செய்துள்ளதாக தெரிவித்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தேர்வில் 300க்கு 300 மதிப்பெண் எடுத்தாலும் இந்த தேர்வின் மூலம் நேரத்தை வீணடிக்காமல் சரியாக தேர்வு எழுதுவது எப்படி என்பதைக் கற்றுக் கொண்டதாகவும் அதை வைத்து மீண்டும் தேர்வு எழுத முடிவு செய்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜே.ஈ.ஈ மெயின் தேர்வை பொருத்தவரை இரண்டு முறை ஒரு மாணவர் தேர்வு எழுதலாம் என்பதும், இரண்டு தேர்வுகளில் எதில் அதிக மதிப்பெண் எடுத்திருக்கின்றாரா, அந்த மதிப்பெண்ணை வைத்து கொள்ளலாம் என விதி உள்ளது. எனவே நவ்யா ஹிசாரியாவுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதால் அவர் மீண்டும் தேர்வு எழுத முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அவர் 97.4 சதவீத மதிப்பெண்களை எடுத்து உள்ளார் என்பதும் ஜே.ஈ.ஈ பயிற்சியின் போது ஒவ்வொரு நாளும் பயிற்சியில் சொல்லிக் கொடுத்த பாடங்களை அன்றே படித்து விடுவேன் என்றும் அதனால் தனக்கு இந்த தேர்வு எளிதாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.
நவ்யா ஹிசாரியின் தந்தை ஒரு தொழிலதிபர் என்பதும் தாயார் சமூக சேவகர் என்பதும் குறிப்பிடத்க்தக்கது. ராஜஸ்தான் பள்ளியில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வை ஹிசாரியா எழுதியுள்ளார் என்பதும் இந்த தேர்விலும் அவர் 100% மதிப்பெண்களை எடுப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது.