close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' படத்தில் ஜெயராம் கேரக்டர் இதுவா?

Tuesday, July 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது என்பதும் முதல் பாகத்தின் அட்டகாசமான போஸ்டர் நேற்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் நாயகன் வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தியும், ராஜராஜசோழன் கேரக்டரில் ஜெயம் ரவியும், ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரமும் நடித்து வருவதாக கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது நடிகர் ஜெயராம் கேரக்டர் குறித்த தகவல் கசிந்துள்ளது. ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்த கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் ஜெயராம் ஆகிய மூவரும் இணைந்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் ஜெயராம் மொட்டையடித்து காணப்படுகிறார்

பொன்னியின் செல்வன் நாவலில் மொட்டையடித்து வரும் கதாபாத்திம் ஆழ்வார்க்கடியான் ஒன்று மட்டும் தான் என்பது அந்த நாவலைப் படித்தவர்களுக்குத் தெரியும். எனவே ஜெயராம் ஆழ்வார்க்கடியான் கேரக்டரில் தான் நடித்து வருவதாக கூறப்படுகிறது

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர். ரவிவர்மன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் இந்த படம் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment