ஜெயம் ரவி: முடிந்தது 'வனமகன்', மீண்டும் தொடங்கியது 'டிக் டிக் டிக்'

  • IndiaGlitz, [Wednesday,February 15 2017]

ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'போகன்' நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூலிலும் திருப்திகரமாக அமைந்த படமாக இருந்த நிலையில் அவருடைய அடுத்தடுத்த படங்களின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இயக்குனர் விஜய் இயக்கத்தில் வித்தியாசமான வேடத்தில் ஜெயம் ரவி நடித்து வந்த 'வனமகன்' படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்துவிட்ட நிலையில் இன்று முதல் அவர் நடித்து வரும் இன்னொரு படமான 'டிக் டிக் டிக்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது.

சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறவுள்ளதாகவும், இந்த படப்பிடிப்புடன் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்திற்கு படம் வந்துவிடும் என்றும் படக்குழுவினர் கூறுகின்றனர்.

ஜெயம் ரவி, நிவேதா, ரமேஷ் திலக் உள்பட பலர் நடித்து வரும் 'டிக் டிக் டிக்' படத்தை 'நாய்கள் ஜாக்கிரதை', 'மிருதன்' படங்களை இயக்கிய சக்தி செளந்திரராஜன் இயக்கி வருகிறார். டி.இமான் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ்-தீபா சந்திப்பு. திருப்பம் ஏற்படுமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்த வழக்கின் தீர்ப்பு வெளிவந்த வரலாற்று முக்கியத்துவமான தினம் இன்று. இந்த வழக்கில் ஜெயலலிதா உள்பட நால்வரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டபோதிலும், ஜெயலலிதா மரணம் அடைதுவிட்டதால் அவரது தண்டனை நீக்கப்பட்டு, மீதி மூவருக்கும் பெங்களூர் தனிநீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் உறுத

ஓபிஎஸ் இல்லத்தில் தீபா. ஆரத்தி எடுத்து வரவேற்பு

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வரும் 24ஆம் தேதி ஜெயலலிதா பிறந்த தினத்தில் அரசியல் பிரவேசம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறியிருந்த நிலையில் சற்று முன்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் அவர் முதல்வர் ஓபிஎஸ் அவர்களை சந்தித்து தனது ஆதரவை அளித்தார்...

நயன்தாரா காதலரின் திடீர் மாற்றம் ஏன்?

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் காதலித்து வருவதாகவும், 'நானும் ரெளடிதான்' படத்தின்போது தோன்றிய இந்த காதல் விரைவில் திருமணத்தில் முடியவுள்ளதாகவும் கூறப்படுகிறது...

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ்-தீபா சந்திப்பு. திருப்பம் ஏற்படுமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்த வழக்கின் தீர்ப்பு வெளிவந்த வரலாற்று முக்கியத்துவமான தினம் இன்று. இந்த வழக்கில் ஜெயலலிதா உள்பட நால்வரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டபோதிலும், ஜெயலலிதா மரணம் அடைதுவிட்டதால் அவரது தண்டனை நீக்கப்பட்டு, மீதி மூவருக்கும் பெங்களூர் தனிநீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் உறுத

எடப்பாடி பழனிச்சாமி உள்பட 10 அமைச்சர்களுக்கு ஆளுனர் அழைப்பு

அதிமுக சட்டமன்ற தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவரை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்கவில்லை