கடந்த வார சென்னை பாக்ஸ் ஆபீஸ் விபரங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்களின் சென்னை வசூல் குறித்து பார்த்து வருகிறோம் அல்லவா. அந்த வகையில் இந்த வார சென்னை வசூல் குறித்து தற்போது பார்ப்போம்
ஏற்கனவே சென்னையில் சூர்யாவின் 'சி3' வசூலில் சாதனை செய்து கொண்டிருப்பதை பார்த்தோம். தற்போது கடந்த வாரம் வெளியான 'ரம்' மற்றும் 'என்னோடு விளையாடு' படங்களின் சென்னை வசூல் குறித்து பார்ப்போம்
தனுஷின் 'விஐபி' புகழ் ரிஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி நடித்த 'ரம்' திரைப்படம் சென்னையில் 10 திரையரங்க வளாகங்களில் 75 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.12,52,420 வசூலாகியுள்ளது. அனிருத்தின் இசையில் உருவான இந்த படத்திற்கு 75% பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர்.
இதேபோல் பரத் நடிப்பில் வெளியான 'என்னோடு விளையாடு' திரைப்படம் சென்னையில் கடந்த வாரம் 11 திரையரங்க வளாகங்களில் 42 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.7,18,040 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் பார்வையாளர்கள் 60% மட்டுமே இருந்ததால் சராசரிக்க்கும் குறைவான படமாக கருதப்படுகிறது.
கடந்த 2ஆம் தேதி வெளியான ஜெயம் ரவி-அரவிந்தசாமியின் 'போகன்' திரைப்படம் கடந்த வாரம் சென்னையில் 10 திரையரங்க வளாகங்களில் 76 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.11,27,810 வசூல் செய்துள்ளது. இந்த படம் பிப்ரவரி 2 முதல் பிப்ரவரி 19 வரை ரூ.2,96,41,730 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout