ஒன்றல்ல, இரண்டு படங்களையும் முடித்துவிட்டேன்: ஜெயம் ரவி

  • IndiaGlitz, [Wednesday,August 25 2021]

ஒன்றல்ல இரண்டு படங்களின் படப்பிடிப்புகளையும் முடித்து விட்டேன் என ஜெயம்ரவி சற்று முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

பிரமாண்ட இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ’பொன்னியின் செல்வன்’. இந்த படத்தில் தனது பகுதியின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக ஜெயம் ரவி சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் அவர் ஒன்றல்ல இரண்டு படங்களின் படப்பிடிப்பை முடித்து விட்டேன் என்று அவர் தெரிவித்திருப்பதால் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பையும் அவர் முடித்து விட்டதாக தெரிகிறது.

மேலும் மணிரத்னம் அவர்களுடன் இணைந்து பணிபுரிந்தது தனது ஆசிர்வாதம் என்றும் அவருடைய நகைச்சுவை, திறமை, இயற்கை மீது காட்டும் அன்பு ஆகியவை தன்னை கவர்ந்தது என்றும், அவருடன் மீண்டும் பணிபுரிய எப்போது வேண்டுமானாலும் தயாராக இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி ராஜராஜசோழன் கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அமெரிக்க பிரஜை என்பதற்கே வெட்கப்படுகிறேன்… பிரபல ஹாலிவுட் நடிகை கடும் சாடல்!

உலகப் பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தற்போது ஆப்கானிஸ்தானில் நிலவிவரும் சூழல் குறித்து கடும் வருத்தம் வெளியிட்டு வருகின்றனர்.

இலங்கை பெண்ணின் பணமோசடி விவகாரம்: ஆர்யாவின் அடுத்த அதிரடி நடவடிக்கை

ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண் ஒருவர் ஆர்யாவிடம் பணம் கொடுத்ததாக மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர்.

தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படப்பிடிப்பு: ராஷிகண்ணா பகிர்ந்த புகைப்படம்!

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'திருச்சிற்றம்பலம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை

ஆணுறை இல்லாததால் பாதுகாப்புக்காக இளைஞர் எடுத்த பயங்கர முடிவு… பலியான உயிர்!

அகமதாபாத்தில் காதலியுடன் உல்லாசமாக இருக்க நினைத்த இளைஞர் ஒருவர் ஆணுறை இல்லாததால் தன்னுடைய

ரூ.5 கோடிக்கு வாட்ச் வாங்கிய இந்தியக் கிரிக்கெட் பிரபலம்… அப்படியென்ன ஷ்பெஷல்?

இந்தியக் கிரிகெட் அணியில் ஆல்ரவுண்டராக இருந்துவரும் ஹர்திக் பாண்டியா சமீபத்தில் கைகடிகாரம் வாங்கிய