குடும்பத்துடன் சிஎஸ்கே மேட்ச் பார்த்த ஜெயம் ரவி.. க்யூட் புகைப்படங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் கொல்கத்தா அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் அடித்த நிலையில் கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 147 ரன்கள் அடித்து பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.
இந்த நிலையில் இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான சிஎஸ்கே ரசிகர்கள் குறிப்பாக தோனியின் ரசிகர்கள் மஞ்சள் உடையுடன் மைதானத்தில் குவிந்திருந்தனர் என்பதும் தோனி களத்தில் இறங்கும்போது கரகோஷம் விண்ணை பிளந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சென்னையில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் போதெல்லாம் திரையுலக பிரபலங்கள் நேரில் வந்து மேட்ச் பார்ப்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் நேற்றைய போட்டியை ஜெயம் ரவி தனது மனைவி மற்றும் மகன்கள் உடன் பார்த்தார். அவர் மைதானத்தில் இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றன.
மேலும் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது குடும்பத்துடன் மேட்ச் பார்த்த புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com