close
Choose your channels

ஜெயம் ரவி மனைவி பிறந்த நாள் பார்ட்டியில் இத்தனை பிரபலங்களா? வைரல் புகைப்படங்கள்..!

Tuesday, April 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தனது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடிய நிலையில் அவருடைய பிறந்தநாள் பார்ட்டியில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி என்பதும் ’ஜெயம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானதை அடுத்து அவரது முதல் பட டைட்டில் அவருடைய பெயருடன் ஒட்டிக்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் ஆரவ் என்ற மகன் ஜெயம் ரவி நடித்த ’டிக் டிக் டிக்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் தனது மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை ஜெயம் ரவி தெரிவித்திருந்தார் இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’எனது தோழி எனது ராணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஆர்த்தி பிறந்தநாள் பார்ட்டி வைத்திருந்த நிலையில் அதில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக மிர்ச்சி சிவா, வைபவ், கீர்த்தி சுரேஷ், நடன இயக்குனர் பிருந்தா, குஷ்பு மற்றும் அவரது மகள்கள் உட்பட பலர் கலந்து கொண்டு ஆர்த்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment