close
Choose your channels

கட்டிப்பிடித்து முத்தம், பெயிண்டிங், விதவிதமான உணவுகள்: ஜெயம் ரவி மனைவி வைத்த லேடீஸ் பார்ட்டி..!

Saturday, May 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ளார் என்பதும் அவரது புகைப்படங்களை பார்த்து இளம் நடிகைகளுக்கு இணையாக அவர் இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ஜெயம் ஜெயம் ஜோடியாக ஆர்த்தி ரவியே நடிக்கலாம், அந்த அளவுக்கு அவர் ஃபிட்டாக இருக்கிறார் என்ற கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகின்றன.

மேலும் சமீபத்தில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அந்த பார்ட்டியில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பதும் கலகலப்பான பார்ட்டியின் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது அவர் லேடீஸ் பார்ட்டி ஒன்றை வைத்துள்ளார். முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த பார்ட்டியில் நடிகை விஜயலட்சுமி, விஜே ரம்யா உட்பட பலர் கலந்து கொண்டனர் என்பதும் அனைவருக்கும் பெயிண்டிங் வரையும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்த்தி ரவி உட்பட அனைத்து பெண்களும் வரைந்த பெயிண்டிங் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் விதவிதமான சைவ மற்றும் அசைவ உணவுகளும் இந்த பார்ட்டியில் பரிமாறப்பட்டது என்பதும் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டவர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து ஆர்த்தி ரவி வரவேற்ற காட்சி அந்த வீடியோவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் இந்த லேடீஸ் பார்ட்டி புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment