தளபதி விஜய் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த ஜெயம் ரவி மனைவி.. இவ்வளவு அழகா போட்டோ எடுப்பாரா?

  • IndiaGlitz, [Tuesday,May 21 2024]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தளபதி விஜய் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் தளபதி விஜய் இவ்வளவு அழகாக புகைப்படம் எடுப்பாரா என்று ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் அவ்வப்போது ஆர்த்தி ஜெயம் ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் மற்றும் குழந்தைகளின் புகைப்படத்தை பதிவு செய்து வருவார் என்பதும் தெரிந்தது.

அந்த வகையில் இன்று அவர் ரசிகர்களில் பல கேள்விகளுக்கு பதில் அளித்த நிலையில் ’நீங்கள் இதுவரை வெளியிடாத புகைப்படம் ஒன்றை வெளியிடுங்கள்’ என்று ஒரு ரசிகர் கேட்டிருந்தார். அதற்கு ஜெயம் ரவியுடன் ரொமான்ஸாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஆர்த்தி ரவி, இந்த புகைப்படத்தை எடுத்தது தளபதி விஜய் என்று கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.



மேலும் அவர் இந்த பதிவில் ஜெயம் ரவியுடன் இணைந்து எடுத்த தனக்கு பிடித்த புகைப்படம், ஜெயம் ரவிக்கு பிடித்த பாடல், திரைப்படம் மற்றும் தன்னுடைய கல்வி தகுதி உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.