நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ஜெயம் ரவி மனைவியின் போட்டோஷூட்.. குஷ்பு, ஸ்ரேயா சரணின் கமெண்ட்ஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி சமீப காலமாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அவர் பதிவு செய்யும் போட்டோஷூட் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் கருப்பு காஸ்டியூமில் அவர் எடுத்து உள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.
நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் ஆரவ் என்பவர் ’டிக் டிக் டிக்’ படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்திருந்தார் என்று குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாகவே ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் அவை பிரபல நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களுக்கு நடிகை குஷ்பூ ’ஸ்டன்னிங்’ என்று கமெண்ட் செய்து ஹார்டின் மற்றும் பயர் எமோஜிக்களை பதிவு செய்துள்ளார்.
அதேபோல் ஸ்ரேயா சரண் ஆர்த்தியின் அழகை பார்த்து ரசித்து ’சோ ஹாட்’ என்று கமெண்ட் செய்து உள்ளார். ரசிகர்கள் தங்கள் பாணியில் ஆர்த்தியின் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments