யோகிபாபுவுக்காக மூன்று மாதம் காத்திருந்த பிரபல நடிகர்: ஒரு ஆச்சரிய தகவல்

  • IndiaGlitz, [Wednesday,February 12 2020]

பிரபல நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வெற்றித் திரைப்படங்களில் ஒன்று ’கோமாளி’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் வசூலிலும் மிகப்பெரிய சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே. இந்த படத்தில் நடித்த ஜெயம் ரவியின் நடிப்பில் பாராட்டுக்கள் குவிந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தில் யோகிபாபுவுக்கு காமெடியையும் தாண்டி முக்கியமான வேடம் என்பதும் ஜெயம் ரவியுடன் அவர் அதிக காட்சிகளில் டிராவல் செய்வார் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக பள்ளி மாணவராக ஜெயம் ரவியும் யோகிபாபுவும் நடித்துள்ள காட்சிகள் பலரையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’கோமாளி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது யோகி பாபு பல படங்களில் ஒரே நேரத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தால் கோமாளி படத்தின் படப்பிடிப்பிற்கு அவரால் வர முடியவில்லை என்றும் இருப்பினும் யோகி பாபு தவிர வேறு நடிகர்கள் அந்த கேரக்டரை நடிக்க முடியாது என்பதால் யோகிபாபுவுக்காக ஜெயம் ரவி உள்பட படக்குழுவினர் மூன்று மாதங்கள் காத்திருந்ததாகவும், மூன்று மாதங்களுக்கு பின்னர் யோகிபாபு அந்த படத்திற்கு தேதி கொடுத்து நடித்து கொடுத்ததாகவும் சமீபத்தில் அளித்த பேட்டி ஜெயம் ரவி கூறியுள்ளார். ஒரு காமெடி நடிகருக்காக பிரபல நடிகர் ஒருவர் மூன்று மாதம் காத்திருந்த செய்தி பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது