ஜெயம் ரவியின் 'வனமகன்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்
- IndiaGlitz, [Tuesday,May 09 2017]
'தனி ஒருவன்', 'போகன்' போன்ற படங்களை அடுத்து ஜெயம் ரவி நடித்து முடித்துள்ள அடுத்த படம் 'வனமகன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
'வனமகன்' திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் சற்று முன்னர் 'யூ' சான்றிதழ் வழங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி சென்சார் அதிகாரிகள் இந்த படத்தில் எந்த காட்சியையும் கட் செய்யவில்லை. இந்த தகவலை ஜெயம் ரவி தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த படம் 'யூ' சான்றிதழ் பெற்றுள்ளதால் தமிழக அரசின் 30% வரிவிலக்கு சலுகைக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 140 நிமிடங்கள், அதாவது 2 மணி நேரம் 20 நிமிடங்கள் ஆகும். சென்சார் சான்றிதழ் தற்போது கிடைத்துவிட்டதால் வெகுவிரைவில் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயம் ரவி, சாயிஷா, வருண், தம்பிராமையா, பிரகாஷ்ராஜ், வேலராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பிரபல இயக்குனர் விஜய் இயக்கியுள்ள இந்த படத்திற்கு திரு ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பும் செய்துள்ளனர். முழுக்க முழுக்க காடுகளில் படமாக்கப்பட்டுள்ள இந்த படம் ஜெயம் ரவிக்கு 'பேராண்மை' போல் மேலும் ஒரு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.