அனல் பறக்கும் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் ஜெயம் ரவி.. இதுதான் காரணம்..!

  • IndiaGlitz, [Saturday,November 11 2023]

பிக் பாஸ் வீடு ஒரு பக்கம் பிரதீப் வெளியேற்றத்தினாலும், இன்னொரு பக்கம் மாயா பூர்ணிமா குரூப்பின் அட்டகாசத்தாலும் பரபரப்பாக உள்ளது. இந்த நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டிற்கு ஜெயம் ரவி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நடித்த ’சைரன்’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த டீசர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டிற்கு ஜெயம் ரவி உட்பட படக்குழுவினர் செல்ல உள்ளனர். கமல்ஹாசன் முன்னிலையில் ஜெயம் ரவியின் சைரன் திரைப்படத்தின் டீசர் வெளியாக உள்ளது.

கமல்ஹாசன் நடிக்க இருக்கும் ’தக்லைப்’ என்ற திரைப்படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜெயம் ரவியின் ’சைரன்’ படத்தின் டீசர் கமல்ஹாசன் முன்னிலையில் வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கேம் ஓவர்.. ரஜினியின் மாஸ் வசனத்துடன் பிரதீப் பதிவு.. செம்ம பதிலடி..!

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பிரதீப் விவகாரம் தான் கடந்த ஒரு வாரமாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பெண்களுக்கு ஆபத்தானவர் என்ற குற்றச்சாட்டை

இந்த வாரம் 2 எலிமினேஷனா? இரண்டும் மாயா குரூப்பா? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக பிரதீப் வெளியேற்றப்பட்டு ஒரு வாரம் ஆகியும் இன்னும் பிரதீப்பை பற்றி போட்டியாளர்கள்

'தீர விசாரிப்பதே மெய்': பிரதீப் பதிவுக்கு கமல்ஹாசனின் பதில்.. புரமோ வீடியோ வைரல்..!

தீர விசாரிப்பதனாலே வந்த தீர்வு, இது தீர்ப்பு அல்ல.. குற்றம் செய்தவர்கள் அதற்கான விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும். இது உலக நியதி. குற்றச்சாட்டியவர்கள் யோக்கியமா?

பிக்பாஸ் வீட்டில் ஆண்களுக்கு பாதுகாப்பு இல்லை: கமல்ஹாசனுக்கு முன்னாள் போட்டியாளர் கோரிக்கை..

 பிக் பாஸ் வீட்டில் பிரதீபால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி ரெட் கார்டு கொடுத்து அவரை வெளியேற்றிய சர்ச்சை இன்னும் தீர்ந்தபாடில்லை. பிரதீப்பை வெளியேற்றியது தவறு என்றும் குறிப்பாக

எம்ஜிஆர் சகோதரராக நடித்த பழம்பெரும் நடிகர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

எம்ஜிஆர் நடித்த 'நாளை நமதே' என்ற திரைப்படத்தில் அவருக்கு சகோதரராக நடித்தவர் நடிகர் சந்திரமோகன்.  82 வயதான சந்திரமோகன் இன்று காலமானார்.