அனைத்து இந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்படும் 'தனி ஒருவன்?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்' திரைப்படம் இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் வெற்றி படங்களில் ஒன்று என்பதை யாராலும் மறுக்க முடியாது. 100வது நாளை நெருங்கியிருக்கும் இந்த படம் எதிர்பார்த்தைவிட பலமடங்கு வசூல் செய்து தியேட்டர் உரிமையாளர்களையும் விநியோகிஸ்தர்களையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.
இந்நிலையில் ராம்சரண் தேஜா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் இந்த படம் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்தி உள்பட அனைத்து வட இந்திய மொழிகளிலும் இந்த படம் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் ரீமேக் உரிமை மற்றும் சாட்டிலைட் உரிமை ஆகியவற்றை ஏஜிஎஸ் நிறுவனத்திடம் இருந்து வட இந்திய நிறுவனம் ஒன்று மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளதாகவும், அந்த நிறுவனம் 'தனி ஒருவன்' படத்தை இந்தி உள்பட வட இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.ஒரு தமிழ் திரைப்படம் கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்படுவது கோலிவுட்டுக்கு கிடைத்த பெருமையாகவே கருதப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments