ஜெயம் ரவியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு தேதி மற்றும் நேரம்

  • IndiaGlitz, [Wednesday,August 31 2016]

கோலிவுட் திரையுலகில் இளையதலைமுறை நடிகர்களில் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய ஜெயம் ரவி, தற்போது 'போகன்' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். அரவிந்தசாமி முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவுள்ள நிலையில் ஜெயம் ரவி நடிக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது.
ஜெயம் ரவியின் அடுத்த படத்தை 'நாய்கள் ஜாக்கிரதை' இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கவுள்ளார். இந்த படத்தின் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் டெக்னீஷியன்கள் தேர்வு நடைபெற்று வரும் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
இந்த படத்திற்கு அட்டகாசமான டைட்டிலை படக்குழுவினர் தேர்வு செய்திருப்பதாகவும், இந்த டைட்டில் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு அறிவிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை ஜெயம் ரவி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
நேமிசந்த் ஜெபக் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'இருமுகன்' படத்திற்கு 'UA'சர்டிபிகேட் ஏன் தெரியுமா?

சீயான் விக்ரம் ஹீரோ, வில்லன் என இரண்டு அட்டகாசமான வேடங்களில் நடித்துள்ள 'இருமுகன்' வரும் செப்டம்பர் 8ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது...

ஜெயம் ராஜா-சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த புன்னகை அரசி

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'ரெமோ' படத்தின் ரிலிஸ் தேதியை அவருடைய ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில்...

ரஜினி, கமல், விஜய் இடத்திற்கு மகேஷ்பாபுவை அழைத்து செல்லும் முருகதாஸ்

இந்தியாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரும் தமிழ், இந்தி மொழிகளில் பல வெற்றி படங்களை இயக்கியவருமான ஏ.ஆர்.முருகதாஸ்

ரஜினி-ரஞ்சித் மீண்டும் இணையும் படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன?

சமீபத்தில் தனுஷ் ஒரு மிகப்பெரிய செய்தியை வெளியிட்டார். ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கும் படத்தை தயாரிப்பதில் பெருமை அடைகிறேன்...

சீயான் விக்ரமின் 'இருமுகன்' ரன்னிங் டைம்

விக்ரம், நயன்தாரா நடிப்பில் அரிமாநம்பி பட இயக்குனர் ஆனந்த்சங்கர் இயக்கிய 'இருமுகன்' திரைப்படம் உலகம் முழுவதும் வரும் செப்டம்பர் 8ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது...