என்னை இன்னொரு பெண்ணுடன் இணைத்து பேசுவதா? அந்த பெண் யார் தெரியுமா? ஜெயம் ரவி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், ஜெயம் ரவியுடன் இணைத்து இன்னொரு பெண்ணை பற்றி பேசப்படுவது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், "என்னை இன்னொரு பெண்ணுடன் இணைத்து பேசுவது தவறு," என்று ஜெயம் ரவி கூறியுள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்த நிலையில், தனக்கே தெரியாமல் விவாகரத்து அறிவிப்பு வந்ததாக ஆர்த்தி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதற்கு விளக்கம் அளித்த ஜெயம் ரவி, "என் வீட்டில் உள்ளவர்களும், ஆர்த்தியின் அப்பாவும், இந்த விவாகரத்து பற்றி ஏற்கனவே அறிந்திருந்தனர். முறைப்படி நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். என் மகன்களுக்கும் இந்த விஷயம் தெரியும். இவ்வளவு இருக்கும்போது, விவாகரத்து விஷயம் எனக்கு தெரியாது என்று ஆர்த்தி கூறுவது ஆச்சரியமாக உள்ளது," என்று கூறியுள்ளார்.
மேலும், "25 வருட சினிமா வாழ்வில் எந்த கிசுகிசுவும் வராமல் வளர்ந்தவன் நான். என்னை இன்னொரு பெண்ணுடன் இணைத்து பேசுவது தவறு. அந்த பெண் ஆதரவற்றவர்; அவர் பலருக்கும் உதவி செய்து வருகிறார். நானும் அவரும் இணைந்து ஆன்மீக மையம் ஒன்றை அமைக்கப் போவதாக இருந்தோம். என்னை இன்னொரு பெண்ணுடன் தொடர்புபடுத்தி பேச வேண்டாம். உண்மை ஒருநாள் நீதிமன்றம் மூலம் வெளிச்சமாய் தெரியும்," என்று ஜெயம் ரவி கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com