வந்தியத் தேவனின் கேரக்டருக்கே பிறந்தவர் கார்த்தி: "பொன்னியின் செல்வன்" ஜெயம் ரவி..
Send us your feedback to audioarticles@vaarta.com
பொன்னியின் செல்வன்’ என்ற டைட்டில் கேரக்டரில் நடித்த நடிகர் ஜெயம் ரவி, தனது கேரக்டர் குறித்தும், மணிரத்னம் இந்த படத்திற்காக உழைத்தது குறித்தும், வந்தியத்தேவன், கரிகால் சோழன் கேரக்டர்களில் நடித்த கார்த்தி, விக்ரம் குறித்து கூறியதாவது:
"பொன்னியின் செல்வன்’…கல்கியில் வெளியான நேரம் ஒவ்வொரு தொடராக சேர்த்து பைண்டிங் செய்து பழைய பேப்பர் கடையிலே வெச்சிருப்பாங்க. அதை வாங்க சைக்கிள்ல பல மைல்கள் போவேன். அப்படிப் படிச்ச ஒரு கதையிலே நீ இன்னைக்கு ஹீரோவா?!’ அப்படின்னு அப்பா அவ்வளவு எமோஷனல் ஆகிட்டார்’ இதைச் சொல்லும் போதே தானும் எமோஷனலாகிறார். அருண்(ள்)மொழி வர்மனாக, கதைத் தலைப்பின் நாயகனாக, பொன்னியின் செல்வனாக என உற்சாகத்தின் மிகுதியில் இருக்கிறார் ‘ஜெயம்’ ரவி.
"உன் கண்ணுக்கு முன்னாடி இருக்கற அத்தனையும் உனக்கு சொந்தம்..
வீட்டு மாடியிலே உட்கார்ந்தா கூட, இந்தப் பக்கத்து வீடு என்னது..
கடல் இருக்கே அதுகூட எனக்குதான் சொந்தம்..
ராஜ சோழன் இப்படிப் பல கேள்விகள்...
அருண்மொழி வர்மன்… இப்படிதான் இருப்பார்.. படம் முடியும் வரை இந்த பாத்திரமாக இப்படியே இரு" என்று முதல் நாள் முதலே மணி சார் இதை தான் செய்ய ன்னார். இப்படித்தான் இருந்தேன். ஒரு டப்பிங்கிலே கூட வசனம் பேசும் போது மணி சார் வசனம் மீட்டர் கூட அவ்ளோ அழகா புரிய வைப்பார். சில வார்த்தைகளை அழுத்துவோம், அப்போ ‘அவ்வளவு அழுத்த வேண்டியதில்ல, கேரக்டரையும், விஷயத்தையும் உள்ளே வாங்கிக்க, அந்தந்த வார்த்தைகள் தானாகவே அழுத்தமாகும்ன்னு சொன்னார்’.
‘நான் நாவல் படிக்கும் போதே மனசிலே இருந்த ராஜ ராஜ சோழன் சிவாஜி சார்தான், அவரை நாமப் பார்த்திட்டோம். அவர் கேரக்டரை எல்லாம் ஓவர்டேக் செய்யவே முடியாது. ஆனால் அருண்மொழி வர்மன் இளவரசனை யாரும் பார்த்ததில்லை, அதை ஒரு பெரிய பிளஸ்ஸா நான் நினைச்சேன். டைட்டில் ரோல் இதைவிட என்ன சவால் இருக்கணும். ஆறு மாசத்துக்கு முன்னாடியே முடி வளர்க்க ஆரம்பிச்சிட்டேன். என் தோள்பட்டைய ரெடி பண்ணவே சரியா இருந்துச்சு. கவசம், வாள் இதெல்லாம் தூக்கவே தனி பலம் வேணும். எப்படி அந்தக் காலத்திலே இந்த 50,100 கிலோ ஆயுதங்கள், கவசமெல்லாம் போட்டுக்கிட்டே இருந்தாங்கன்னு தோணுச்சு. அடுத்து குதிரை சவாரி, வாள் வீச்சு இப்படி நிறைய தயாராக வேண்டியிருந்தது. நான் ராஜா என்கிற மனநிலையை கொண்டு வரவே தனியா என்னை நான் தயார் செய்துக்கிட்டேன். ‘பொன்னியின் செல்வன்’ படம்ன்னு ஆரம்பிச்ச உடனேயே ரெண்டு பாகம் கடகடன்னு படிச்சேன், ஆனா மணி சாரின் ஸ்கிரீன்பிளே படிக்கும் போது கொஞ்சம் புதுசா இருந்துச்சு. இது மணி சார் வெர்ஷன் அதுக்கு ரெடியாகிட்டேன்.
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இசைக்காக, நம்ம தமிழர்கள் உலகம் முழுக்க பரப்பி விட்ட இசை அத்தனை இசையையும் கொண்டு வந்திருக்கார் ரஹ்மான் சார். மணி சார்+ரஹ்மான் சார் காம்போவுக்கு நான் உட்பட அனைவரும் ரசிகன் தான்.
வந்தியத் தேவனின் கேரக்டருக்கே பிறந்தவர் கார்த்தி. அவ்வளவு சரியான பொருத்தம். ’என் சகோதரிக்கு வந்தியத் தேவன் மேலே நம்பிக்கை, அதனால் எனக்கும் அவர் மேலே நம்பிக்கை இதுதான் கதையிலே பந்தம்’ன்னு மணி சார் சுலபமா விளக்கிட்டார். விக்ரம் சார், ஜஸ்ட் லைக் தட் சீன்களை நடிச்சிட்டு போயிட்டே இருப்பார். ஐஸ்வர்யா மேம் கூட சேர்ந்து நடிக்கறதெல்லாம் யோசிச்சதே இல்லை. ஹேப்பி.
படத்தின் ஒவ்வொரு அழகுக்கும் பின்னால் கேமரா மேன் ரவிவர்மன் சார் பங்கும் அதிகமா இருக்கும். நிறைய லோகேஷன்கள், உலகம் முழுக்க சுற்றி ஷூட் செய்திருக்கோம். தோட்டா தரணி சார் செட்லாம் பார்த்து ஆச்சர்யப் படுவீங்க. அவ்ளோ மெனெக்கெட்டிருக்கார்.
எல்லோரையும் மாதிரி படம் பார்க்க நானும் ஆவலோடு இருக்கேன்.
இவ்வாறு பொன்னியின் செல்வன் கேரக்டரில் நடித்த ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments