'பொன்னியின் செல்வன்' அருள்மொழி வர்மன் போஸ்டர்: ஜெயம் ரவி கூறியது என்ன தெரியுமா?
- IndiaGlitz, [Friday,July 08 2022]
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக ’பொன்னியின் செல்வன்’ நாவலின் ஹீரோ வந்தியத்தேவன், கரிகால் சோழன், மற்றும் நந்தினி, குந்தவை ஆகியோரின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி இணையதளத்தில் வைரலானது.
இந்த நிலையில் சற்றுமுன்னர் ’பொன்னியின் செல்வன்’ நாவலின் முக்கிய கேரக்டரான அருள்மொழிவர்மன் கேரக்டரில் நடித்த ஜெயம் ரவியின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஜெயம் ரவி தனது டுவிட்டரில், தமிழனின் பெருமை, சோழனின் வரலாறு, அதில் பொன்னியின் செல்வனாக ’அருள்மொழிவர்மன்’ மெய்சிலிர்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தொலைநோக்கு கொண்ட இளவரசர், பொற்காலத்தின் சிற்பி, ராஜ ராஜ சோழன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு 5 மொழிகளிலும் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து மொழிகளிலும் டீசரை வெளியிடும் நட்சத்திரங்களின் விபரங்கள் இதோ:
தமிழ் - சூர்யா
தெலுங்கு - மகேஷ்பாபு
மலையாளம் - மோகன்லால்
கன்னடம் - ரக்சித் ஷெட்டி
இந்தி - அமிதாப் பச்சன்
தமிழனின் பெருமை , சோழனின் வரலாறு , அதில் பொன்னியின் செல்வனாக “அருள்மொழி வர்மன்” மெய்சிலிர்க்கிறேன் ❤️
— Jayam Ravi (@actor_jayamravi) July 8, 2022
Thank you #ManiRatnam sir ????
Hail the Visionary Prince, the Architect of the Golden Era, the Great Raja Raja Chola…introducing Ponniyin Selvan! #PS1 TEASER OUT TODAY AT 6PM. pic.twitter.com/hCR6wgC3Nq