எம் ராஜேஷ் இயக்கிய படம் எதுவுமே காமெடி படம் இல்லை, நாம தான் தப்பா புரிஞ்சிகிட்டோம்: ஜெயம் ரவி
- IndiaGlitz, [Sunday,February 11 2024]
நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் அளித்த பேட்டியில் ’இயக்குனர் எம் ராஜேஷ் படங்கள் எல்லாமே ஒரு ஃபேமிலி சப்ஜெக்ட் படங்கள் தான், அதில் காமெடியும் இருக்கும், ஆனால் அவர் முழுக்க முழுக்க காமெடி படத்தையே எடுத்திருப்பதாக நாம் நம்பி விட்டோம்’ என்று தெரிவித்துள்ளார்
எம் ராஜேஷ் இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’பிரதர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஜெயம் ரவி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய போது ’எம் ராஜேஷ் படங்கள் எல்லாமே காமெடி படங்கள் என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவருடைய முந்தைய படங்களை பார்த்தால் முழுக்க முழுக்க ஒரு ஃபேமிலி சப்ஜெக்ட் படமாக தான் இருக்கும். அந்த பேமிலி சப்ஜெக்ட் படத்தில் காமெடியும் இருக்கும். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் காமெடியை அதிகமாக தனது படத்தில் சேர்ந்ததால் அவரது படங்கள் காமெடி படங்கள் என்று நாம் நம்பி விட்டோம்.
ஆனால் ’பிரதர்’ படத்தில் அவர் மீண்டும் தனது பழைய பாணியில் ஒரு ஃபேமிலி சப்ஜெக்ட் கதையை என்னிடம் கூறிய போது எனக்கு அந்த கதை பிடித்து விட்டது. நானும் நிறைய ஆக்சன் படங்கள் செய்து விட்டதால் ஒரு ஃபேமிலி சப்ஜெக்ட்டில் நடிக்கலாம் என்பதால் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
இந்த படத்திலும் அவரது ஸ்டைலில் காமெடி இருக்கும், அதே நேரத்தில் டான்ஸ், பேமிலி சப்ஜெக்ட் உள்ளிட்ட அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்கும். எனவே நீண்ட இடைவெளிக்கு பிறகு எனது வித்தியாசமான படமாக ’பிரதர்’ இருக்கும் என்று ஜெயம் ரவி தெரிவிதுள்ளார்.