பள்ளிப் பாட புத்தகத்தில் கேப்டன் விஜயகாந்த் குறித்த பாடம்: பிரபல நடிகர் கோரிக்கை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பள்ளி பாடப் புத்தகத்தில் விஜயகாந்த் குறித்த பாடம் இடம்பெற வேண்டும் என பிரபல நடிகர் ஜெயம் ரவி கேட்டுக்கொண்டார்
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், ஜெயம் ரவி, ராதாரவி, தயாரிப்பாளர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்
இதில் கமல்ஹாசன் பேசியபோது ’விஜயகாந்த் பல அவமானங்களையும் விமர்சனங்களையும் சந்தித்து இருப்பதாகவும், அவர் பட்ட அவமானங்களை வேறு யாரும் படக்கூடாது என நினைத்தார், அவர் கொடுப்பது பிறருக்கு தெரியாது, அவரிடம் எனக்கு பிடித்ததே அவருடைய கோபம்தான், ஆனால் அந்த கோபத்தில் நியாயம் இருக்கும் என்றும் தெரிவித்தார்
இதனை அடுத்து பேசியது ஜெயம் ரவி ‘எல்லோரும் இறந்த பிறகு தான் கடவுளாக மாறுவார்கள். ஆனால் விஜயகாந்த் வாழும்போதே கடவுளாக இருந்திருக்கிறார். எனவே அவரது அவரை பற்றி பள்ளி பாட புத்தகத்தில் இடம் பெற செய்ய வேண்டும், சத்ரியனுக்கு சாவே இல்லை என்று தெரிவித்தார்.
தயாரிப்பாளர் சிவா பேசிய போது ’நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க விஜயகாந்த் தான் கடுமையாக உழைத்தார் என்றும் நடிகர் சங்கத்திற்காக விஜயகாந்த் தனது ரத்தத்தை சிந்தி இருக்கிறார் என்றும் கூறியிருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments