மீண்டும் இணைகிறதா 'வேலாயுதம்' கூட்டணி?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2011ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த 'வேலாயுதம்' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து கடந்த சில ஆண்டுகளாக விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் மோகன் ராஜா பெயர் தவறாமல் இடம்பெற்று வருகிறது. இதனையடுத்து விரைவில் மோகன் ராஜா, விஜய் படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது
இந்த நிலையில் 'கோமாளி' படத்தின் புரமோஷனில் பேட்டி அளித்த ஜெயம் ரவி, 'விஜய்யும் மோகன் ராஜாவும் அவ்வப்போது தங்களது அடுத்த படம் குறித்து பேசி வருவதாகவும், விரைவில் விஜய்-மோகன்ராஜா கூட்டணி இணைந்து ஒரு படத்தை ரசிகர்களுக்கு தருவார்கள் என்று கூறினார். இருப்பினும் இந்த படம் 'தனி ஒருவன் 2' படத்திற்கு பின்னரே உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜெயம் ரவி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்கவுள்ளார். இதனையடுத்து அவர் மோகன் ராஜா இயக்கத்தில் 'தனி ஒருவன்' திரைப்படத்தில் நடிப்பார். அதன்பின்னரே விஜய் - மோகன் ராஜா படம் உருவாக வாய்ப்பு இருப்பதால் இந்த படம் 2022ல் தொடங்கலாம் என கருதப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com