இந்த ஒரு வருடம் மட்டுமே வேண்டவே  வேண்டாம்: ஜெயம் ரவி வேண்டுகோள்

இந்த வருடம் மட்டும் தனது பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் என நடிகர் ஜெயம் ரவி தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இன்னும் ஒரு சில நாட்களில் வரப்போகும் எனது பிறந்தநாளை தாங்கள் அனைவரும் எதிர் நோக்கி இருப்பதை எண்ணி நான் பெருமை கொள்கிறேன். உங்கள் அன்பு ஒன்று மட்டுமே ஒவ்வொரு வருடமும் என் பிறந்த நாளை சிறப்பாக செய்கிறது.

ஆனால் இந்த வருடம் உலகளாவிய கோரோனோ தொற்று காரணமாக நான் உங்களை விரும்பி கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றுதான். கொண்டாட்டங்களையும் கூட்டமாய் சேர்வதையும் தவிர்த்துவிடுங்கள். நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் பாதுகாப்பிற்காகவும் தான் இந்த நடவடிக்கை.

கொண்டாட்டங்களுக்கு பதிலாக நான் எப்படி உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்கிறேனோ, அப்படி நீங்களும் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்து என் மேல் கொண்ட அன்பை வெளிப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் சேர்ந்து இந்த கொரனோ தொற்றை எதிர்த்து போராடி வெற்றி பெறுவோம்.

இவ்வாறு ஜெயம் ரவி தனது ரசிகர்களுக்கு விடுத்த வேண்டுகோளில் தெரிவித்துள்ளார்.

More News

பாஜகவில் இணையும் ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர்?  பரபரப்பு தகவல்

ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் என பரபரப்பாக பேசப்பட்டவர் திடீரென இன்று பாஜகவில் இணைவதாக வெளிவந்திருக்கும் தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கறுப்பினத்தவரை பின்னால் இருந்து பலமுறை சுட்ட போலீஸ்!!! US இல் வெடிக்கும் அடுத்த சர்ச்சை!!!

அமெரிக்காவில் கடந்த மே மாதம் 25 ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் போலீஸார் பிடியில் சிக்கி உயிரிழந்தார்.

சரசரவென சரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்!!! இடிபாடுகளுக்குள் 70 சிக்கியதாக கவலை!

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் பகுதியில் நேற்று மாலை 5 மாடிக்கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று தீடிரென்று சரிந்து விழுந்ததாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

எஸ்பிபி சைகை காட்டி என்னை நலம் விசாரித்தார்: எஸ்பிபி சரண் நெகிழ்ச்சி 

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை கடந்த 3 நாட்களாக சீராக இருப்பதாக

இயக்குனர் கார்த்திக் ராஜூவின் அடுத்த படத்தில் பிக்பாஸ் நடிகை நாயகியா?

தினேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'திருடன் போலீஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் ராஜூ.