கூடிய சீக்கிரம் ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் தர்றேன்.. அதுவரைக்கும் Wait and Watch: 'பிரதர்' டீசர்..!

  • IndiaGlitz, [Saturday,September 21 2024]

ஜெயம் ரவி நடித்த ‘பிரதர்’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கின்ற நிலையில், இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி, இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த டீசரின் ஆரம்பத்தில், எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரு லட்சியம் இருக்கும். உங்கள் லட்சியம் என்ன என ஜெயம் ரவியிடம் கேட்டபோது அதற்கு அவர், ‘மூன்று வேளையும் நன்றாக சாப்பிடனும், வயிறு ஃபுல்லா சாப்பிடணும், எட்டு மணி நேரம் தூங்கணும், அப்புறம் மனசில் பட்டதை பேசணும். அவ்வளவுதான் என்னுடைய லட்சியம்’ என்று ஜெயம் ரவி கூறுவதுடன், டீசர் தொடங்குகிறது.

அதன் பின், ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் இடையிலான ரொமான்ஸ், மற்றும் விடிவி கணேஷ் காமெடி காட்சிகள் உள்ளன. இந்த டீசரிலிருந்து, இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ரொமான்ஸ் காமெடி படம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, சரண்யா பொன்வண்ணன், சீதா, எம்எஸ் பாஸ்கர், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ராஜேஷ் எம் இயக்கியிருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த திரைப்படம், வரும் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கே பாலசந்தர் குறித்து அவதூறு பேச்சு.. கண்டனம் தெரிவித்த  இயக்குனர் சங்கத்திற்கு கண்டனம் தெரிவித்த சுசித்ரா..!

மறைந்த இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாடகி சுசித்ராவுக்கு இயக்குனர் சங்கம் கண்டனம் தெரிவித்த நிலையில், நானும் இயக்குனர் சங்கத்திற்கு

'பாட்ஷா' படத்திற்கு சம்பளம் குறைத்து கொடுத்தார்.. அதன் பின் நடந்தது என்ன? வைரமுத்து..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா' படத்திற்கு தான் பாட்டு எழுதிய போது சம்பளம் குறைத்துக் கொடுத்ததாகவும் அதன் பின் நடந்தது என்ன என்பது குறித்து பாடலாசிரியர் வைரமுத்து

நடிகை அளித்த புகார்.. 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்.. ஆட்சி மாற்றத்தால் அதிரடி நடவடிக்கை..

நடிகை ஒருவரின் புகாரின் அடிப்படையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆட்சி மாற்றம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

என்னை இன்னொரு பெண்ணுடன் இணைத்து பேசுவதா? அந்த பெண் யார் தெரியுமா? ஜெயம் ரவி..!

ரு சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், ஜெயம் ரவியுடன் இணைத்து இன்னொரு பெண்ணை பற்றி பேசப்படுவது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், "என்னை இன்னொரு பெண்ணுடன்

ஒரு மாசத்துக்கு மேல் ஒரு பொண்ணோட அவன் இருக்க மாட்டான்: மகத் நடித்த 'காதலே காதலே' டீசர்..!

பிக் பாஸ் மகத் நடித்த "காதலே காதலே" என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.