கூடிய சீக்கிரம் ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் தர்றேன்.. அதுவரைக்கும் Wait and Watch: 'பிரதர்' டீசர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜெயம் ரவி நடித்த ‘பிரதர்’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கின்ற நிலையில், இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி, இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த டீசரின் ஆரம்பத்தில், "எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரு லட்சியம் இருக்கும். உங்கள் லட்சியம் என்ன என ஜெயம் ரவியிடம் கேட்டபோது அதற்கு அவர், ‘மூன்று வேளையும் நன்றாக சாப்பிடனும், வயிறு ஃபுல்லா சாப்பிடணும், எட்டு மணி நேரம் தூங்கணும், அப்புறம் மனசில் பட்டதை பேசணும். அவ்வளவுதான் என்னுடைய லட்சியம்’ என்று ஜெயம் ரவி கூறுவதுடன், டீசர் தொடங்குகிறது.
அதன் பின், ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் இடையிலான ரொமான்ஸ், மற்றும் விடிவி கணேஷ் காமெடி காட்சிகள் உள்ளன. இந்த டீசரிலிருந்து, இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ரொமான்ஸ் காமெடி படம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, சரண்யா பொன்வண்ணன், சீதா, எம்எஸ் பாஸ்கர், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ராஜேஷ் எம் இயக்கியிருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த திரைப்படம், வரும் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout