'பொறக்கும் போதும் துரோகம் பண்ணு, இறக்கும் போதும் துரோகம் பண்ணு.. 'அகிலன்' சிங்கிள் பாடல்..!

  • IndiaGlitz, [Monday,February 27 2023]

ஜெயம் ரவி நடித்த ‘அகிலன்’ என்ற திரைப்படம் வரும் மார்ச் 10ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

‘பூலோகம்’ திரைப்படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அகிலன்’ திரைப்படத்தில் ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர், ஹரிஷ் உத்தமன், தன்யா ரவிச்சந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜெயம் ரவி இந்த படத்தில் கடல் கொள்ளையராகவும் பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாகவும் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

சாம் சிஎஸ் இசையில் உருவான இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சற்று முன் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. துரோகம் என்ற இந்த பாடலை சாம் சிஎஸ் மற்றும் சிவம் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர் என்பதும் இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

’பொறக்கும்போதும் துரோகம் பண்ணு, இறக்கும்போதும் துரோகம் பண்ணு’ என்ற ஆரம்ப வரிகளில் உருவாகிய இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

More News

கணவர் இறந்த 24 நாட்களில் மனைவியும் மரணம்.. பிரபல இயக்குனர் குடும்பத்தில் நிகழ்ந்த சோகம்..!

பிரபல இயக்குனர் மறைந்து 24 நாட்களில் அவரது மனைவியும் காலமாகி உள்ளது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் 2': ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன் 2' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய் சேதுபதியின் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் இதுவா? மாஸ் டைட்டில் என ரசிகர்கள் கொண்டாட்டம்..!

 விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் கசிந்து உள்ள நிலையில் மாஸ் டைட்டில் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

எனக்கும் 'அரியவன்' படத்துக்கும் இடையே எந்த சம்பந்தமும் கிடையாது: மித்ரன் ஜவஹர்

தனுஷ் நடித்த 'யாரடி நீ மோகினி' 'குட்டி' 'திருச்சிற்றம்பலம்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் ஜவஹர்இயக்கத்தில் 'அரியவன்' என்ற திரைப்படம் உருவாகி இருப்பதாகவும்

'டிரஸ் வாங்க பணமில்லையா? சன்னிலியோனுக்கே டஃப் கொடுக்கும் ராஷ்மிகா மந்தனா..!

நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் அணிந்த காஸ்ட்யூமை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்து 'டிரஸ் வாங்க கூட பணம் இல்லையா?