ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜெயம் ரவி நடிப்பில் மூன்று திரைப்படங்கள் விறுவிறுப்பாக உருவாகி வரும் நிலையில் அதில் ஒரு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜேஷ் எம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் ’பிரதர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் மிகப்பெரிய பட்ஜெட்டில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’ஜெனி’ என்ற படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் 3 நாயகிகள் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஜெயம் ரவி நடிப்பில் உருவான ’சைரன்’ என்ற திரைப்படமும் ரிலீஸ்-க்கு தயாராக உள்ளது.
இந்த நிலையில் ’சைரன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 16 என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரையும் ஜெயம் ரவி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்,. அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில், செல்வகுமார் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது.
Parole on Feb 16th🗓️#Siren🚨 will bringing you an immense theatrical experience in Tamil & Telugu 👍🏼#SirenFromFeb16
— Jayam Ravi (@actor_jayamravi) January 22, 2024
A @gvprakash Musical
Background Score @SamCSmusic @antonybhagyaraj @KeerthyOfficial @anupamahere @sujataa_HMM @iYogiBabu @IamChandini_12 @AntonyLRuben… pic.twitter.com/RmBXpvCgOx
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments