ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் மாஸ் பிசினஸ்.. அடுத்தடுத்து இனி வெற்றிப்படங்களா?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜெயம் ரவி நடித்த சமீபகால படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறாத நிலையில் அவருடைய அடுத்த படத்தின் பிசினஸ் மிகப்பெரிய அளவில் ஆகி உள்ளதை அடுத்து ஜெயம் ரவியின் அடுத்தடுத்த படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் ஜெயம் ரவி தற்போது ’பிரதர்’ ’ஜெனி’ ’காதலிக்க நேரமில்லை’ ஆகிய மூன்று படங்களில் நடித்து வரும் நிலையில் மூன்று படங்களுமே கிட்டத்தட்ட ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் ’பிரதர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பிசினஸ் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
முதல் கட்டமாக ’பிரதர்’ படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை ஜி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் இந்த இரண்டும் சேர்த்து 37 கோடி ரூபாய்க்கு பிசினஸ் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மாஸ் நடிகர்களின் படங்கள் கூட சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் விற்பனையில் திணறி வரும் நிலையில் ஜெயம் ரவியின் படம் 37 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியிருப்பதை அடுத்து இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் ’ஜெனி’ மற்றும் ’காதலிக்க நேரமில்லை’ படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால் ஜெயம் ரவியின் மார்க்கெட் உச்சத்திற்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments