ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நடித்த ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது ஏற்கனவே அறிந்ததே. மேலும் அவர் ’ஜனகணமன’ மற்றும் ’அகிலன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஜெயம் ரவி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தை ஸ்கிரீன்சீன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இந்தப் படத்தை எம்.ராஜேஷ் இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் எம் ராஜேஷின் திரைப்படங்கள் ரொமான்ஸ் மட்டும் காமெடி கதையம்சம் கொண்ட படங்களாக இருக்கும் நிலையில் இந்த படம் அவரது வித்தியாசமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

More News

நம்பர் ஒன் என்பது ஒரு மாயா: பூஜா ஹெக்டே பேட்டி!

தமிழ் தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை பூஜா ஹெக்டே, நமக்கு அளித்திருக்கும் பிரத்தியேக பேட்டியில் திரையுலகில் நம்பர் ஒன் என்பது ஒரு மாயை என்றும்

சென்னை பெண்ணை மறுமணம் செய்கிறாரா இசையமைப்பாளர் டி இமான்?

தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி இமான் சென்னையை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் அல்டிமேட்: இந்த வாரமும் டபுள் எவிக்சனா?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஐந்து வாரங்களாக 24 மணி நேரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் எவிக்ஷன் இல்லை என்றாலும் அதற்கு முந்தைய வாரம்  டபுள் எவிக்சன் இருந்தது.

தமிழகத்தை உலுக்கிய கோகுல்ராஜ் கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு!

தமிழகத்தையே உலுக்கிய கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. 

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்: முதல்முதலில் வடிவேலு செய்யும் முயற்சி!

 நீண்ட இடைவேளைக்கு பின்னர்  நடிகர் வடிவேலு மீண்டும் திரையுலகில் ரீஎன்ட்ரி ஆகி உள்ளார் என்றும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்திலும், 'மாமன்னன்' என்ற திரைப்படத்தில்