ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நடித்த ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது ஏற்கனவே அறிந்ததே. மேலும் அவர் ’ஜனகணமன’ மற்றும் ’அகிலன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஜெயம் ரவி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தை ஸ்கிரீன்சீன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இந்தப் படத்தை எம்.ராஜேஷ் இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குனர் எம் ராஜேஷின் திரைப்படங்கள் ரொமான்ஸ் மட்டும் காமெடி கதையம்சம் கொண்ட படங்களாக இருக்கும் நிலையில் இந்த படம் அவரது வித்தியாசமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
Happiness is announcing our next big combo!!
— Screen Scene (@Screensceneoffl) March 5, 2022
Our very own Jayam Ravi directed by Rajesh.
And yeah!! It's a Harris Jayaraj musical!!@actor_jayamravi @rajeshmdirector @jharrisjayaraj #stormisbrewing#staytunedtoknowmore pic.twitter.com/HBxkJPp3uH
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments