close
Choose your channels

இருட்டை விரட்டுவதற்கு சூரியன் தேவையில்லை.. ஒரே ஒரு தீக்குச்சி போதும்: ஜெயம் ரவியின் அடுத்த பட அறிவிப்பு..!

Saturday, October 12, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் ஜெயம் ரவி, தற்போது "ஜெனி", "பிரதர்”, ’காதலிக்க நேரமில்லை" ஆகிய படங்களில் நடித்துள்ள நிலையில், அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு, வீடியோவுடன் வெளியாகி, இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

’இருட்டை விரட்டுவதற்கு சூரியன் தேவையில்லை, ஒரே ஒரு தீக்குச்சி போதும்" என்ற வசனத்துடன் ஆரம்பிக்கும் இந்த வீடியோ, ஒரு நிமிடத்திற்கு மேல் உள்ளது.

பி.டி.ஜி யுனிவர்சல்" என்ற தயாரிப்பு நிறுவனம், ஜெயம் ரவியின் அடுத்த இரண்டு படங்களை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிறுவனம், ஏற்கனவே தமிழில் "ரெட்டை தல" மற்றும் "சென்னை சிட்டி கேங்ஸ்டர்" ஆகிய படங்களை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பி.டி.ஜி யுனிவர்சல் தயாரிப்பில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாக இருக்கும் ஒரு படத்தையும், "ரெமோ" மற்றும் "சுல்தான்" படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்க இருப்பதாகவும், இன்னொரு படத்தை ஷங்கரின் உதவியாளர் அருள் சக்தி முருகன் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment