பெங்காலி மொழியில் ரீமேக் ஆகும் சூப்பர் ஹிட் தமிழ்ப்படம்
Wednesday, August 17, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்' திரைப்படம் 'துருவா' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆகி வருவதும், அதில் ராம்சரண்தேஜா நடித்து வருவதும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த படம் இன்னொரு மொழியிலும் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கிய தனி ஒருவன்' திரைப்படம் பெங்காலி மொழியில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், ஜெயம் ரவியின் கேரக்டரில் Jeet மற்றும் அரவிந்தசாமி கேரக்டரில் Prosenjit ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் முறையான அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருடம் ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது.
ஸ்ரீவெங்கடேஷ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் இயக்குனர் வெகுவிரைவில் அறிவிக்கப்படுவார் என தெரிகிறது. இந்நிலையில் சமீபத்தில் மோகன் ராஜா, 'தனி ஒருவன் 2' விரைவில் உருவாகும் என்றும் அந்த படம் ஜெயம் ரவியின் 25வது படமாக அமையும் என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments