'அந்த சைக்கோ இங்க எங்கேயோ தான் இருக்கான்': ரிலீசுக்கு முன் வெளியான 'இறைவன்' வீடியோ..!

  • IndiaGlitz, [Wednesday,September 27 2023]

ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவான ‘இறைவன்’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இந்த வீடியோவில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா இருக்கும் வீட்டிற்கு ஒரு லெட்டர் வர அந்த லெட்டரில் உனக்கு பிடித்தவர்கள் கொலை செய்யப்பட போகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயம் ரவி வீட்டின் வெளியே வந்து அந்த லெட்டரை யார் வைத்திருப்பார்கள் என்று தேடுகிறார். அப்போது உணவு டெலிவரி கொடுக்க வந்த பையனை மிரட்டுகிறார். இதையடுத்து அவரை சமாதானப்படுத்தி நயன்தாரா வீட்டுக்குள் அழைத்துப் போகிறார்.

இந்த திகில் காட்சி சற்றுமுன் வெளியானதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயம் ரவி, நயன்தாரா, ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன், உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படம் ஹரி வேதாந்த் ஒளிப்பதிவில் மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பில் உருவாகி உள்ளது. இந்த படத்தை ‘எங்கேயும் எப்போதும்’, ‘மனிதன்’ படங்களை இயக்கிய அகமது இயக்கியுள்ளார்.