5 நாட்கள் தொடர் விடுமுறை.. பின்வாங்கிய பிரபாஸ் படம்.. ஜெயம் ரவி படத்திற்கு அடித்தது ஜாக்பாட்..!

  • IndiaGlitz, [Friday,September 01 2023]

ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை மற்றும் பிரபாஸ் நடித்த ’சலார்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு ஆகிய காரணங்களால் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த ’இறைவன்’ திரைப்படத்திற்கு ஜாக்பாட் அடித்து உள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில், அகமது இயக்கத்தில், யுவன்சங்கர் ராஜா இசையில் உருவான திரைப்படம் ’இறைவன்’. இந்த படம் ஏற்கனவே ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் செப்டம்பர் இறுதி வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் செப்டம்பர் 28ஆம் தேதி ’இறைவன்’ ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 28ஆம் தேதி மிலாடி நபி விடுமுறை, செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 சனி ஞாயிறு விடுமுறை, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி விடுமுறை என 5 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் செப்டம்பர் 28ஆம் தேதி ’இறைவன்’ திரைப்படம் ரிலீஸ் ஆனால் ஜாக்பாட் அடிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் செப்டம்பர் 28ஆம் தேதி பிரபாஸ் நடித்த ’சலார்’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஜெயம் ரவியின் ’இறைவன்’ திரைப்படத்தின் ஓப்பனிங் வசூல் பிரமாதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ‘இறைவன்’ திரைப்படத்தின் டிரைலர் வரும் 3ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிரைலரில் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹரி வேதாந்த் ஒளிப்பதிவில் மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.