தரமான வெற்றி பெற்ற தனி ஒருவனின் ரகசியம்

  • IndiaGlitz, [Tuesday,September 01 2015]

சமீபகாலங்களில் ஒரு படத்தின் விளம்பரத்திற்கு பலவிதமான டெக்னிக்கள் பயன்படுத்தப்படுகின்றன. சமுக வலைத்தளங்களில் ஏகப்பட்ட ஹேஷ்டேக்குகள் உருவாக்கி, அதை டிரெண்டுக்கு கொண்டு வந்து, ஆர்ப்பாட்டமாக இசை வெளியீட்டு விழா நடத்தி, அதில் அந்த படத்தில் நடித்த நடிகர்களை புகழ்பாட என்றே ஒரு கூட்டத்தை வரவழைத்து செயற்கையாக ஒரு படத்தை புரமோஷன் செய்து வருகின்றனர். ஆனால் இது எதுவும் இல்லாமல் அமைதியாக வெற்றி பெற்றுள்ள திரைப்படம் 'தனி ஒருவன்.

இந்த படத்தின் நாயகனின் போஸ்டருக்கு பாலாபிஷேகம் இல்லை, ரிலீஸ் தினத்தன்று ரசிகர்களுக்கு கொடுக்கும் பிரியாணி பொட்டலங்கள் இல்லை, டீசருக்கு ஐந்து மில்லியன் ஆறு மில்லியன் பார்வையாளர்கள் என பெருமை கொண்டாடவில்லை, ரூ.200 கோடி பட்ஜெட் ரூ.300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிரமாண்டமான படம் என்ற விளம்பரங்கள் இல்லை, ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்யவில்லை. ஆனால் இது எதுவுமே இல்லாமல் அமைதியான அதே நேரத்தில் ஆர்ப்பாட்டமாக வெற்றி பெற்றுள்ளது 'தனி ஒருவன்.

இந்த வெற்றியின் ஒரே ரகசியம் வலிமையான ஸ்கிரிப்ட் மற்றும் கடுமையான உழைப்பு. இந்த ஒரே காரணத்தால் இந்த படத்தை பார்த்த ஆடியன்ஸ்களே இந்த படத்திற்கு விளம்பரம் செய்து வருகின்றனர். இதனால் படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. எனவே நடிகர்கள் முதலில் இதுபோன்ற ஸ்ட்ராங்கான ஸ்கிரிப்ட்டை தேர்வு செய்ய வேண்டும். அதை தேர்வு செய்த பின்னர் கடுமையாக உழைத்தால் வெற்றிக்காக பல போலித்தனமான விளம்பரங்களை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை முன்னணி நடிகர்கள் புரிந்து கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.