கமல்ஹாசனை அடுத்து ஜெயம் ரவி?

  • IndiaGlitz, [Sunday,July 19 2015]

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'உத்தம வில்லன்' திரைப்படத்தின் சென்னை சிட்டி வெளியீட்டு உரிமையை பெற்ற அபிராமி ராமநாதன், அடுத்து கமல் படத்தின் டைட்டில் தயாராகியுள்ள ஜெயம் ரவியின் 'சகலகலாவல்லவன்' திரைப்படத்தின் சென்னை சிட்டி உரிமையை பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படம் வரும் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெறவுள்ளது.


முதலில் 'அப்பாடக்கர்' என்ற பெயர் வைக்கப்பட்ட இந்த படத்தின் டைட்டிலை சமீபத்தில் இயக்குனர் சுராஜ், 'சகலகலாவல்லவன்' என்று மாற்றினார். லட்சுமி மூவீஸ் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி, விவேக், சூரி, பிரபு உள்பட பலர் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கடந்த மாதம் ரோமியோ ஜூலியட்' என்ற வெற்றிப்படத்தை கொடுத்த ஜெயம் ரவி, ஒரே மாத இடைவெளியில் ரிலீஸ் செய்யும் இந்த படமும் அவருக்கு வெற்றிப்படமாக மாற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

More News

ரஜினி-ரஞ்சித் படத்தின் நாயகி ராதிகா ஆப்தே?

அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கிய ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது...

சென்னை மெட்ரோ ரயிலில் த்ரிஷா பயணம்

சென்னை மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் கடந்த மாதம் 29ஆம் தேதி தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.......

நாளை அஜீத்-ஸ்ருதிஹாசன் கொல்கத்தா பயணம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிந்துவிட்ட...

நீண்ட இடைவெளிக்கு பின்னர் அர்ஜூன் - சினேகா இணையும் படம்

ஜெய்ஹிந்த் 2' படத்திற்கு பின்னர், ஆக்சன் கிங் அர்ஜூன் தனது மகள் ஐஸ்வர்யா நடிக்கும் படத்தை இயக்குவார் என செய்திகள் வெளிவந்த நிலையில்...

என்னுடைய வெற்றிக்கு என் நண்பர்களே காரணம். விஷ்ணுவிஷால்

சமீபத்தில் வெளிவந்த முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை ஆகிய ஹாட்ரிக் வெற்றிப் படங்களை கொடுத்த நடிகர் விஷ்ணுவிஷால்...