close
Choose your channels

ஹாலிவுட்டுக்கு செல்லும் ஜெயம் ரவி திரைப்படம்

Monday, February 22, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழின் முதல் ஜோம்பி திரைப்படமான 'மிருதன்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆகி மாபெரும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த ஜோம்பி திரைப்படம் தமிழுக்குத்தான் புதியது. ஆனால் ஹாலிவுட்டில் பல ஜோம்பி திரைப்படங்கள் வெளியாகி பெரும் வெற்றிகளை பெற்றுள்ளது. ஜோம்பி திரைப்படத்திற்கென ஹாலிவுட்டில் ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் 'மிருதன்' திரைப்படம் ஹாலிவுட்டுக்கு தகுந்த மாதிரி ஒருசில மாற்றங்கள் செய்து ஆங்கிலத்தில் டப் செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஹாலிவுட் ஜோம்பி பட ரசிகர்களால் இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயம் ரவி, லட்சுமிமேனன், உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை 'நாய்கள் ஜாக்கிரதை' படத்தை இயக்கிய சக்தி செளந்திரராஜன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு டி.இமான் அற்புதமான இசையமை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment