ஹாலிவுட்டுக்கு செல்லும் ஜெயம் ரவி திரைப்படம்

  • IndiaGlitz, [Monday,February 22 2016]

தமிழின் முதல் ஜோம்பி திரைப்படமான 'மிருதன்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆகி மாபெரும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த ஜோம்பி திரைப்படம் தமிழுக்குத்தான் புதியது. ஆனால் ஹாலிவுட்டில் பல ஜோம்பி திரைப்படங்கள் வெளியாகி பெரும் வெற்றிகளை பெற்றுள்ளது. ஜோம்பி திரைப்படத்திற்கென ஹாலிவுட்டில் ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் 'மிருதன்' திரைப்படம் ஹாலிவுட்டுக்கு தகுந்த மாதிரி ஒருசில மாற்றங்கள் செய்து ஆங்கிலத்தில் டப் செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஹாலிவுட் ஜோம்பி பட ரசிகர்களால் இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயம் ரவி, லட்சுமிமேனன், உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை 'நாய்கள் ஜாக்கிரதை' படத்தை இயக்கிய சக்தி செளந்திரராஜன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு டி.இமான் அற்புதமான இசையமை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

4 மணி நேரம் மேக்கப் போட செலவழித்த 'ரெமோ' சிவா

'ரஜினிமுருகன்' சூப்பர் ஹிட் படத்தை அடுத்து தற்போது 'ரெமோ' என்ற படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் இதுவரை இல்லாத...

தர்மதுரை இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தமன்னா

'நானும் ரெளடிதான், 'சேதுபதி' என இரண்டு தொடர் சூப்பர் ஹிட் படங்களில் நடித்த விஜய்சேதுபதி தேசிய விருது இயக்குனர் சீனுராமசாமியின்..

அனிருத்தின் 'ரம்'முக்கு ஐஸ்வர்யா தனுஷ் வாழ்த்து

கடந்த சில நாட்களுக்கு முன் 'பீப்' பாடல் விவகாரத்தில் சிக்கியிருந்த அனிருத் கிட்டத்தட்ட அந்த பிரச்சனையில் இருந்து வெளியே வந்துள்ள...

புத்திர சோகம் -- வாழ்வை சிதைக்கும் பேரிடர் : விவேக் உருக்கம்

இணையதள பத்திரிகைக்காக என்னை மனம்திறக்கச் சொல்கிறார்கள். அதுவும் சமீபத்தில் மறைந்த… என் மனமெல்லாம் நிறைந்த என் மகன் பற்றி...

கோவை போலீஸ் நிலையத்தில் சிம்பு ஆஜர்

கடந்த ஆண்டு இறுதியில் அனிருத் இசையமைப்பில் சிம்பு பாடியதாக கூறப்பட்ட பீப் பாடலில் ஆபாச வார்த்தைகளும்...