close
Choose your channels

ஜெயம் ரவி மனைவி பகிர்ந்த மேஜிக் புகைப்படங்கள்.. கண்கொள்ளா காட்சி என ரசிகர்கள் கமெண்ட்ஸ்..!

Saturday, April 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ள மேஜிக் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்ப்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும் என்று கமெண்டில் பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி என்பதும் இவரது படங்கள் தொடர்ந்து ஹிட் ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். தற்போது அவர் நடித்துள்ள ’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இதையடுத்து அவர் ’இறைவன்’ ‘சைரன்’ உள்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.. இந்த நிலையில் அவ்வப்போது ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி தனது குடும்ப புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வரும் நிலையில் தற்போது குடும்பத்துடன் சுற்றுலா சென்ற புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள லேப்லேண்ட் என்ற அழகிய பகுதிக்கு ஜெயம் ரவி குடும்பத்தினர் சுற்றுலா சென்றுள்ள நிலையில் இதுகுறித்த மேஜிக் புகைப்படங்களை ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது என்றும் இது ஒரு மேஜிக் போல் இருக்கிறது என்றும் கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment