ஜெயம் ரவியுடன் இணையும் அஜீத்தின் தங்கை மற்றும் மகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிபிராஜுக்கு 'நாய்கள் ஜாக்கிரதை' என்ற படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த இயக்குனர் சக்தி செளந்தரராஜன், இயக்கும் அடுத்த படத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தற்போது வந்த தகவலின்படி இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை கிராமத்து பெண் கேரக்டர்களில் நடித்து வந்த லட்சுமி மேனன், முதல்முறையாக இந்த படத்தில் பேயாக நடித்து வருகிறார். கோலிவுட்டில் ஏகப்பட்ட பேய்ப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றது. இன்னும் ஒருசில படங்கள் தயாரித்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் முழுக்க முழுக்க காமெடியை மையமாக கொண்ட திரைக்கதை என்றும், இந்த படத்தை பார்க்கும் ஆடியன்ஸ்களுக்கு கண்டிப்பாக புதுமையான அனுபவம் ஏற்படும் என்றும் இயக்குனர் சக்தி செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் பேபி அனிகா நடித்து வருகிறார். இவர் அஜீத்தின் 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்தின் மகளாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அஜீத்துக்கு மகளாக நடித்த அனிகாவும், அஜீத்துக்கு தங்கையாக நடித்து வரும் லட்சுமி மேனனும் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்புகள் சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடைபெறவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com