ஜெயம் ரவியின் மிருதனுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்

  • IndiaGlitz, [Sunday,February 07 2016]

கடந்த 2015ஆம் ஆண்டு நான்கு படங்களில் நடித்து வெற்றி நாயகனாக வலம் வந்தவர் ஜெயம் ரவி. இவருடைய நடிப்பில் இவ்வருடம் வெளியாகவுள்ள முதல் படம் 'மிருதன்'. தமிழின் முதல் ஜோம்பி படமாக உருவாகியுள்ள இந்த படத்தை 'நாய்கள் ஜாக்கிரதை' படத்தை இயக்கிய சக்தி செளந்திரராஜன் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் 'மிருதன்' திரைப்படம் நேற்று சென்சார் அதிகாரிகளால் சென்சார் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் "A" சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். இதனால் தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்பதோடு குழந்தைகள் பார்க்க முடியாத படமாகவும் ஆகியுள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே இந்த படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்ப படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இந்த திரைப்படம் வரும் 12ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ரிவைசிங் கமிட்டிக்கு இந்த படம் சென்று வந்த பிறகே அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

More News

கணிதன் சென்சார் தகவல் மற்றும் ரிலீஸ் தேதி

அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான ''ஈட்டி''திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதால் அவருடைய அடுத்த படமான 'கணிதன்' படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ...

சுசீந்திரனின் ''வில் அம்பு'' ரிலீஸ் தேதி

''வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனரான சுசீந்திரன் அதன்பின்னர் நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டியநாடு, ஜீவா, பாயும் புலி உள்பட பல படங்களை இயக்கியுள்ளார்...

கமல்-ஸ்ருதி படம் மைக்கேல் மதனகாமராஜன் 2-ஆம் பாகமா?

கமல்ஹாசன், குஷ்பு, ஊர்வசி, ரூபிணி, நாகேஷ் உள்பட பலர் நடித்த சூப்பர் ஹிட் படம் 'மைக்கேல் மதனகாமராஜன். சிங்கீதம் சீனிவாசன் இயக்கத்தில் கடந்த 1991ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் கமல், நான்கு வித்தியாசமான வேடங்களில் நடித்திருந்தார்....

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஸ்ரீதிவ்யா

சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் குடிபுகுந்த நடிகை ஸ்ரீதிவ்யா, அதன்பின்னர் காக்கி சட்டை, வெள்ளக்கார துரை, ஈட்டி, போன்ற ஹிட் படங்களில் நடித்து முன்னணி இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்....

'வேதாளம்' ரீமேக்கில் இரண்டு சூப்பர் ஸ்டார்கள்

அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய 'வேதாளம்' திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி ரூ.125...