ஜெயில்ல இருந்து வெளியில போறதை விட தப்புல இருந்து வெளியே போகணும்: 'சைரன்' டீசர்..
- IndiaGlitz, [Sunday,November 12 2023]
ஜெயம் ரவி நடித்த ‘சைரன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது
ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய இந்த படத்தை அந்தோணி பாக்யராஜ் இயக்கி உள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில், செல்வகுமார் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படத்தின் டீசர் அசத்தலாக உள்ளதால் நிச்சயம் இந்த படம் ஜெயம் ரவிக்கு மற்றொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஜெயில்ல 1500 க்கும் மேற்பட்ட கைதிகள் இருந்தாலும் நம்ம 250 பேர் ரொம்ப ஸ்பெஷல்
ஜெயில இருந்து தான் வெளியே போற நாளுக்காக தவம் போல காத்திருந்தான்
ஜெயில் இருந்து வெளியே போறதை விட நாம பண்ண தப்புல இருந்து வெளியே வருவதற்கு தான் யோசிக்கணும்
கெட்டவன் நல்லவனா நடிக்கிறதா நான் பார்த்து இருக்கேன், ஆனா நல்லவன் இவ்வளவு நல்லவனா நடிக்கிறத நான் இப்பதான்யா பாக்குறேன்
நீங்க எல்லாம் நல்லவனா நல்லவனா நடிக்க வச்சிட்டீங்களே
போன்ற டீசரில் உள்ள வசனங்கள் கவனத்தை பெறுகிறது
ஜெயம் ரவி சரி கைதியாகவும் கீர்த்தி சுரேஷ் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இந்த படம் கதையை வித்தியாசமாக இருப்பதால் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகிய இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளதாக டீசர் அறிவிக்கப்பட்டுள்ளது.