close
Choose your channels

மீண்டும் ரீமேக் செய்கிறார் 'தனி ஒருவன்' ராஜா

Thursday, September 3, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இதுவரை மற்ற மொழிகளில் ரிலீஸான வெற்றி படங்களை மட்டுமே ரீமேக் செய்து 'ரீமேக் ராஜா' என்ற பெயரை பெற்ற மோகன் ராஜா, 'தனி ஒருவன்' படத்திற்காக சொந்தமாக ஸ்கிரிப்ட் எழுதி அதில் வெற்றியும் பெற்றார். 'ரீமேக் ராஜா' என்ற பெயர் மாறி தற்போது 'தனி ஒருவன்' ராஜா என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் மீண்டும் ரீமேக் படம் ஒன்றை இயக்கவிருப்பதாகவும், ஆனால் இம்முறை அவர் ரீமேக் செய்வது அவருடைய 'தனி ஒருவன்' படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


தனி ஒருவன்' படத்தை சமீபத்தில் பார்த்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான், ஜெயம் ரவியின் கேரக்டரில் நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தார் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். சல்மான்கான் விரும்பினால் இந்த படத்தை இந்தியில் நானே இயக்க தயார் என மோகன் ராஜா அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் ரிலீஸான 'தனி ஒருவன்' படம் பிரம்மாதமான வசூலை கொடுத்துள்ளதாகவும், இந்த வாரம் 'பாயும்புலி' உள்பட சில படங்கள் ரிலீஸானாலும் தனி ஒருவன்' படத்திற்கும் நல்ல வசூல் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment